Skip to main content

'தோழமையை நிலைநிறுத்த இந்த விவகாரத்தில் தீர்வு வேண்டும்'-கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Tamil Nadu Chief Minister's letter to Kerala Chief Minister: 'We need a solution to this issue to maintain friendship'

சிலந்தி ஆற்றின் அருகே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் என பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தில், 'சிலந்தி ஆற்றின் அருகே கட்டப்படும் தடுப்பணை பிரச்சனை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு விவரங்கள் மிகவும் தேவை என்பதால் இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான தோழமை உணர்வை நிலைநிறுத்த இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் வரை இந்த பணியை நிறுத்தி வைக்குமாறு கேரள அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்த வேண்டும். இந்த தடுப்பணை விவகாரம் குறித்த திட்டம் எதுவும் தமிழக அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடுமோ வழங்கப்படவில்லை. திட்டம் தொடர்பான விவரங்களை தமிழகத்தின் நீர்வளத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் கேரள நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளார். இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரத்தின் முழு விபரங்களை தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு உடனடியாக வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இதுவரை முதல்வர் அங்கு போவாதது ஏன்?' - தமிழிசை கேள்வி

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'Why hasn't the Chief Minister gone there yet?'-Tamizhisai question

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''தமிழக ஆளுநரை தமிழக பாஜகவின் நிர்வாகிகள் அனைவரும் இன்று சந்தித்தோம். சில கோரிக்கைகளை வைத்தோம். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த விஷச்சாராயத்தினால் மக்கள் இறந்து கொண்டிருப்பதும், பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதும், தமிழக அரசு அதை இட்டுச் செல்கின்ற முறையும் சரியாக இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. இதில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மாநில அரசைக் தாண்டி அவர்கள் எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை. அதனால் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை.

அதேபோல் அங்கே சிகிச்சை பெற்று வருபவர்களில் பலபேர் கண் பார்வை இழந்து இருக்கிறார்கள். பலபேர் இன்னும் அபாயகரமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஜிப்மர் மருத்துவமனையில் சிலர் அனுப்பப்பட்டுள்ளார்கள். எந்த மருத்துவமனையில் யார் சிகிச்சை பெறுவது என்பதில் கூட குழப்பம் நிலவி இருக்கிறது. புதன்கிழமை தான் இது கண்டுபிடிக்கப்பட்டது என்று வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் செவ்வாய்க்கிழமையே அதிகமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இதை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடிக்க தவறிவிட்டது. அதோடு மட்டுமல்லாது அடுத்த நாள் கலெக்டரோடு திமுகவை சேர்ந்த எம்எல்ஏவும் உட்கார்ந்து இதை மறைத்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு அமர்ந்து பொய் சொன்ன எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே அவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த பாரபட்சம் நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.

அது மட்டுமல்ல அவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ள நிலையில் அந்தத் துறையின் அமைச்சரோ, முதலமைச்சரோ அங்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நினைக்காதது எந்த அளவிற்கு திராவிட மாடல் அரசு தமிழகத்தில் உள்ள மக்களை மதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.  ஜனநாயக நாட்டில் ஒரு குற்றம், ஒரு பிரச்சனை மாநிலத்தில் நடந்தது என்றால் அதைக் கண்டிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது அவர்களை போராடக்கூட  அனுமதிக்கவில்லை'' என்றார்.

Next Story

தொடர் மழை; ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
erode

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் பாசனங்களுக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்த வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து 58 அடியை எட்டியது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 492 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 58.37 அடியாக உயர்ந்தது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும்,கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.73 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.41 அடியாக உயர்ந்து உள்ளது.