Skip to main content

“தமிழக முதல்வர் இதை மட்டும் செய்தால் எல்லா ரகசியமும் வெளியே வரும்” - அமித்ஷா பேச்சு

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

Tamil Nadu Chief Minister will do this and all the secrets will come out" - Amit Shah speech

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இன்று இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தைத் துவங்க இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் நிகழ்ச்சியானது துவங்கியது.

 

தொடர்ந்து நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ''தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கூட்டணிக் கட்சி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழில் பேச முடியாததற்கும் மன்னியுங்கள். ராமேஸ்வரம் பூமி இந்தியாவின், இந்து மதத்தின் சின்னமாக விளங்குகிறது. என் மண்; என் மக்கள் நடைப்பயணம் இந்திய நாட்டில் 130 கோடி மக்களின் மனதில் ஒரு மரியாதையை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகின்ற ஒரு நடைப்பயணம். இது அரசியல் சார்ந்ததல்ல. தமிழகக் கலாச்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் நடைப்பயணம். தமிழ்நாட்டை ஊழலிலிருந்து விடுவிக்க நடத்தப்படும் நடைப்பயணம். ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தைப் பேணும் அரசை உருவாக்கும் நடைப்பயணம். இந்த நடைப்பயணம் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் பிரதமரின் செய்தியைக் கொண்டு செல்லப்போகிறார் அண்ணாமலை'' என்றார்.

 

தொடர்ந்து பேசிய அமித்ஷா, “இந்த ஆட்சி ஊழல் புரிபவர்களின் ஆட்சி. குற்றம் புரிபவர்களின் ஆட்சி. இந்த அரசு மின் பகிர்மான கழகத்தில் ஊழல் புரிந்த அரசு. ஏழை மக்களுக்கு விரோதமான அரசு. அவர்கள் செய்த பல கோடி ரூபாய் ஊழல் தமிழக மக்கள் முன் வெளியே வந்திருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி நாட்டை வலுப்படுத்த நினைக்கவில்லை. தங்கள் வாரிசுகளை முன்னேற்ற நினைக்கிறார்கள். நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக திமுக உள்ளது.

 

அந்த அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் கூட கைதாகி உள்ளார். கைதாகி சிறையில் உள்ள நிலையிலும் அவர் அமைச்சராக இருப்பது ஏன்? செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை முதல்வர் ஸ்டாலின் ஏற்றால் எல்லா ரகசியமும் வெளியே வந்துவிடும். காங்கிரஸ், திமுக என்றாலே நிலக்கரி, 2ஜி ஊழல் போன்ற ஊழல்கள் தான் நினைவுக்கு வரும். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளாக ஊழல்கள், குடும்ப ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். பயங்கரவாதத்தை ஒடுக்க சர்ஜிகல் விமானப்படை தாக்குதல்களைப் பிரதமர் மோடி நடத்தினார். மீனவர்களின் பிரச்சனைக்கும் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான் காரணம். காங்கிரஸ் கூட்டணிதான் இலங்கைத் தமிழர்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்தது. பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை ஒரு ட்வீட் பதிவிட்டாலே ஆட்சிக்கு ஆட்டம் ஏற்படும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அனைத்து பால் கேன்களுக்கும் ஜிஎஸ்டி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
'GST for all milk cans' - Nirmala Sitharaman announcement

டெல்லியில்  53 வது ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே சீரான 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்கு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே வகையான ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் கேன்கள் மட்டுமல்லாது அட்டைப்பெட்டிகள், சோலார் குக்கர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சேவைகளை பொறுத்தவரை நடைமேடை சீட்டு உள்ளிட்ட அனைத்து விதமான ரயில்வே சேவைகளுக்கும் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, நடைமேடை சீட்டு, பொருட்களை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் உள்ளிட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் தங்கும் விடுதி கல்வி நிறுவனங்களுக்கு வெளியே இருந்தாலும், மாத வாடகை 20 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருந்தாலும், மாணவர்கள் 90 நாட்கள் தொடர்ச்சியாக அங்குத் தங்கினால் அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தக் கூட்டத்தில் மத்திய பட்ஜெட் தொடர்பாகவும் மாநில நிதி அமைச்சர்களுடனும் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் அளித்துள்ளனர். தமிழக அரசின் சார்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கைகளை நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.

Next Story

300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு; 100 பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
BJP workers arrested for struggle in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் எனவும் தமிழக அரசின் செயல்பாடு மெத்தனப் போக்கே காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கஞ்சா சாராயம் போன்ற போதைப் பொருட்களின் ஊடுருவல் அதிகமாக இருப்பதாகவும் கூறி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயத்தால் பலியானவர்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் ஈடுபட முயன்றனர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு காரில் வந்தவர்களை மறித்து போலீசார் பாஜக நிர்வாகிகளை ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் குண்டு கட்டாக கைது செய்து மண்டபத்தில் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து வேனியல் ஏற்றி அனுப்பினர். பாதுகாப்பு பணிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு ஏடிஎஸ்பி மற்றும் இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.