Tamil Nadu Cabinet Meeting Date Notification

தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்கான தேதியை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31 ஆம் தேதி மாலை 06.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இதற்கான அறிவிப்பை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் புதியதாகத் தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும், அரசின் கொள்கை முடிவுகள் குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை காரணமாக வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது நடைபெற இருக்கும் அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.