Skip to main content

டி-சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது... -வானதி சீனிவாசன்

Published on 07/09/2020 | Edited on 07/09/2020
hj

 

 

இந்தி மொழிக்கு எதிரான எதிர்ப்புகளை தற்போது தமிழகத் திரைத்துறை  பிரபலங்கள் கையிலெடுத்திருக்கிறார்கள். இவர்களின் நூதனப் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்திக்கு எதிராக டீ-சர்ட் புரட்சியை உருவாக்கி வருகின்றனர்.

 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாக்கியராஜின் மகன் சாந்தனு, அவரது மனைவி கீர்த்தி உள்ளிடோர், இந்தி தெரியாது போடா, நான் தமிழ்ப் பேசும் இந்தியன்  என்கிற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-சர்ட்டுகள் அணிந்து போஸ் கொடுத்து வருவதுடன் அதே டீ-சர்ட்டுகளை அணிந்து வலம் வரவும் செய்கிறார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் இவ்வாறு டீ சர்ட் அணிந்து வருகிறார்கள். நேற்று ட்விட்டரில் அந்த வாசகம் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் டி-சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்; ஆனால் ஆட்சி எங்களிடம் இருக்கிறது' - வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
' You have succeeded; But the government is with us' - Vanathi Srinivasan interview

நேற்று கோவையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுகவில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை பறைசாற்ற இந்த முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''இதற்கு முன்பு கூடதான் இதுபோன்ற கூட்டணியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இது முதல் தடவை அல்ல. நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் ஆனால் ஆட்சி எங்களிடம் இருக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம். நீங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் மத்தியில் மூன்றாவது முறையாக எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். உங்களோடு கூட்டணியில் உள்ளவர்கள் அடுத்த சட்டசபை தேர்தல் வரை எத்தனை நாள் கூட்டணியில் இருப்பார்கள் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்கிறோம்.

எங்களுடைய கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. 2004-இல் திமுக மத்தியில் கூட்டணி அரசின் ஆட்சி அமைக்கின்ற போது மந்திரிகளுடைய துறைகளுக்காக என்னென்னவெல்லாம் பஞ்சாயத்து நடந்தது; யார் யார் கிட்ட எல்லாம் பஞ்சாயத்து நடந்தது. பத்திரிகையாளர்கள்தான் எந்த மினிஸ்ட்ரி யாருக்கு வேண்டும் என முடிவு செய்துகொண்டு இருந்தார்கள். ஆனால் இப்பொழுது எவ்வளவு ஸ்மூத்தாக கூட்டணி அரசு எல்லா கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நடந்துள்ளது.

கடந்த ஏழாம் தேதி பார்லிமென்டில் நிதீஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் இவ்வளவு திறமையான பிரதமருடைய தலைமையில் பணியாற்றுவதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என இரண்டு தலைவர்களும் பேசுகிறார்கள். அதனால் எங்களுடைய கூட்டணியில் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த முடியும் என்று நினைக்க முடியாது. அத்தனை கூட்டணிக் கட்சிகளும் பிரதமர் மோடி மீது பிரம்மாண்டமான நம்பிக்கை வைத்துள்ளார்கள்; எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். எங்களுடைய ஐந்து வருட காலம் எந்தவித சிக்கலும் இல்லாமல் நல்லபடியாக போகும். நாங்கள் எந்தப் பத்திரிகையாளரையும், இடைத் தரகரையும், புரோக்கரையும் வைத்துக்கொண்டு மந்திரி சபையை அமைக்கவில்லை'' என்றார்.

Next Story

'கோவை தோல்வி வருத்தமளிக்கிறது' - வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
'Coimbatore defeat is sad'-Vanathy Srinivasan interview

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் சென்னை விமானநிலையம் வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மூன்றாவது முறையாக ஒரு வரலாற்று சாதனையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க இருக்கிறார். தொடர்ச்சியாக ஆட்சி செய்வது என்பது மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் சவாலான விஷயம். அந்தச் சாதனையைப் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. நாளை பாராளுமன்ற மைய மண்டபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினுடைய நடந்து முடிந்த  தேர்தலில் வெற்றிபெற்ற எம்பிக்கள், ராஜ்யசபா எம்பிக்கள், பாஜக தேசிய நிர்வாகிகளுக்கான கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதில் நாடு முழுவதும் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் 'கோவையின் தேர்தல் முடிவு குறித்து சொல்லுங்கள்' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''கோவை முடிவு என்பது எங்களுக்கு வருத்தத்தை தந்திருக்கக் கூடிய முடிவுதான். ஆனாலும் கூட மக்களுடைய தீர்ப்பை மதித்து அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக மக்கள் பணி செய்வதற்கு பாஜக எங்களுக்கு பயிற்றுவித்திருக்கிறது. எப்பொழுதும் மக்களுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்து கெண்டே இருப்போம். மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் அமைகின்ற பொழுது கோவை பகுதிக்கு என்னவெல்லாம் திட்டங்கள் சொல்லி இருக்கிறோமோ அதை எல்லாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கூட பல்வேறு பொய்களை முன் வைத்தார். பாஜக வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள்; இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் எனப் பலவிதமான பொய் பிரச்சாரங்களை காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டனர். ஆனால் இவற்றையெல்லாம் மீறி தான் மீண்டும் மூன்றாவது முறையாக நாங்கள் ஆட்சி அமைக்கிறோம்'' என்றார்.