தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களாக நடந்துவரும் ரெய்டுவிவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமியின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வரும் பங்கு பற்றிய விவரத்தை மத்திய வருமான வரித்துறை ஆதாரத்துடன் எடுத்துள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியான சுப்ரமணி, எடப்பாடியின் மகன் மிதுன் சகலை சம்பந்தியான ராமலிங்கம் குடும்பத்தின் பின்னணியை தோண்டி துருவிய வருமான வரித்துறை நேற்றுவரை 1340 கோடி கரன்சியாகவும் மேலும் தங்கமாகவும் உள்ளது என அவர்களுடைய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள தொடர்புகள் மூலம் டெல்லியில் பேசப்பட்டது அதன் அடிப்படையில் பாதுகாப்பு துறையிலுள்ள அந்த பெண் மந்திரி அவரிடம் தான் ஒட்டுமொத்த தமிழக அரசியல் சூழலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அவர் இன்று காலை சென்னைக்கு கொடுத்த தகவல் படி சரி இனிமேல் எதுவும் நடக்காது. சட்டப்படி வருமான வரித்துறை செய்கிறரெய்டுவழக்கமானதுதான். அதில் கம்பெனிகள் சட்டப்படி ஆதரங்களை காட்டிய பிறகு வரி செலுத்தவேண்டிய நிலமை மட்டும் வரும் மேற்கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதற்கிடையே வருகிற 18 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றதீர்ப்பு, அடுத்து 11 பேர் உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கவேண்டியுள்ளது. ஆனாலும் இதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை கொடுத்த தகவல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அரசியல் ரீதியாக எந்த அழுத்தமும் கொடுக்கப்படாது என பாதுகாப்புத்துறை பெண் அமைச்சர் கூறியிருக்கிறார். இதனைதொடர்ந்து இன்று 11 மணிக்குமேல் உற்சாகமான எடப்பாடி பழனிச்சாமி அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார். தொடர்ந்து மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்காக கோவை வந்த பழனிச்சாமி உற்சாகமாக காணப்பட்டார்.
ரெய்டு, தொடர் நடவடிக்கை என அனைத்து கைவிடப்பட்டுள்ளது என அவரது உற்சாகத்தில் தெரிகிறது. இதன் பின்னணியில் அரசியல் சூட்சமங்கள் விளையாட்டாக போகிறது.