Skip to main content

“மதுரை கோவை பத்தி பேசுறீங்க; வேலூர யாராவது கவனிச்சீங்களா?” - துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

 "Talk about Madurai Coimbatore; Did anyone pay attention to Velura?''-Duraimurugan laughs at the speech

 

பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ''நிதிநிலை அறிக்கையில் குறிப்பாக கோவை பகுதிக்கு ஒரு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று நான் என்னுடைய முதல் உரையில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல் மத்திய சிறைச்சாலை பகுதி அமைந்திருக்கின்ற இடத்திலே செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான ஒரு திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதற்கு இந்த வருடம் 43 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த பணிகளும் விரைவாக துவங்கப்பட வேண்டும். வேகமாக வளர்ந்து வரக்கூடிய நகரங்களில் கோவை முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் வளர்ந்து வரக்கூடிய நகரத்திற்கு கனெக்டிவிட்டி என்று சொல்கின்ற இணைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது விமான நிலையம். கோவையில் இருக்கக்கூடிய சாலைகளை பற்றி பல்வேறு முறை பேரவையில் பதிவு செய்திருக்கிறேன்'' என்றார்.

 

அதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''கோவை மெட்ரோவை பொறுத்த வரை பலமுறை திட்டமிட்டு பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதனால் லோடு பிரச்சனையால் வழித்தடங்களை மாற்றியமைத்து அதற்குப் பிறகு பீசிபிலிட்டு டெஸ்ட் பண்ணப்பட்டு அதற்கு அனுமதி கொடுத்து தற்பொழுது டிபிஆர்-க்கு அனுப்பி இருக்கிறோம். இன்னும் இரண்டு மாதத்தில் வந்துவிடும். விமான நிலையத்தை பொறுத்தவரை போன ஆண்டு நிதி எல்லாம் ஒதுக்கி கிட்டத்தட்ட 85 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து விட்டது. இன்னும் பாக்கி இருக்க வேலைகளை வேகமாக செய்ய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்டர்நேஷனல் டிக்லரேஷன் எங்கள் கையில் இல்லை. அது ஒன்றிய அரசிடம் இருக்கிறது. அதனால் நாங்கள் எங்களுடைய பணியை விரைவாக செய்கிறோம். அவர் உறுப்பினராக இருக்கக்கூடிய கட்சி தான் அங்கு டெல்லியில் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அவங்க அமைச்சரிடம் கேட்க வேண்டும். எப்படி மதுரைக்கு நாங்கள் கேட்டு காத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் மதுரைக்கு கேட்டு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டாக மாற்றினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

 

அப்போது எழுந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''இவர்கள் மதுரை-கோவை இரண்டு ஏர்போர்ட் பற்றியும் பேசிக் கொள்கிறார்கள். வேலூர் ஒன்று இருக்கிறது. அதை யாராவது கவனிச்சீங்களா? இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு முடிஞ்சா நாங்களும் ஃபிளைட்ல போய் இறங்குவோம்'' என சொல்ல அவையிலிருந்த அனைவரும் சிரித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்