T. T. V. Dhinakaran

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு நீதிமன்றத்தில் அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜரானார்.

Advertisment

கடந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் அமமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் கைப்பாவையாகதமிழக அரசு இருந்து மக்களை ஏமாற்றி வருகிறது என்றும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாகவும் டி.டி.வி.தினகரன் மீது கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 செப்டம்பர் 19ல் முதல்வர் சார்பில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

2018 அக்டோபர் 3ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சாந்தி முன்னிலை விசாரணைக்கு வந்தது.

Advertisment

இந்த வழக்கில் ஆஜராக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு டி.டி.வி.தினகரன் வந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.