Skip to main content

அடாவடி கல்லூரி மாணவர்களுக்கு  நீதிமன்றம் கொடுத்த சூப்பர் தண்டனை!!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

கல்லூரிகள் பல மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாக இருக்கிறது. ஆனால் சில மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விதமாகவும் இருக்கும், காரணம் அவர்களின் நடவடிக்கைகளை பொறுத்தே அமைகிறது.

கல்லூரிகளில் ரவுடிசம் என்பது தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதும், அவர்களுக்கு வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து புரிய வைப்பதும் பேராசிரியர்களுக்கு பெரிய பிரச்சனையாக, தலைவலியாக இருக்கிறது. 

 

Super sentence given by the court to College students

 

இந்நிலையில் திருச்சி கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற அடிதடி தகராறு வழக்கில் நீதிமன்ற விசாரணை நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாணவர்களுக்கு இடையே பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் கட்டையினாலும், பீர் பாட்டிலாலும் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தின்போது திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு 28 மாணவர்களை கைது செய்தனர்.

 

Super sentence given by the court to College students

 

இந்த வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் அனைவரும் சமரசம் ஆவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரணை செய்தார். விசாரணை முடிவில் 28 மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார் .

பின்னர் மோதலில் ஈடுபட்ட அடாவடி மாணவர்கள் 28 பேரும் வருகிற 22ஆம் தேதி திருச்சி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பொது வார்டு சுத்தம் செய்யவேண்டும் . அதுதொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வரிடம் சான்றிதழ் பெற்று 26ம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வீட்டிற்கும், கல்லூரிக்கும் அடங்காத கல்லூரி மாணவர்களுக்கு நீதிபதி கொடுத்த இந்த தண்டனை பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.