அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 % சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவை தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருக்கிறது.
ஆனால் இன்னும் கையெழுத்து ஆகாததால், உடனடியாக ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என இன்று சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை அருகே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.