Skip to main content

திடீர் மழையால் குளிர்ந்த சென்னை; 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

nn

 

சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென மழை பொழிந்ததால் குளிர்ச்சி நிலவியது. சென்னையில் வடபழனி, அசோக் நகர், கிண்டி, வேளச்சேரி, போரூர், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வண்டலூர், சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 

அதேபோல் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும் நாமக்கல், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி பகுதிகளிலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தையை ஒப்படைப்பதில் அரசு மருத்துவமனை அலட்சியம்; ஊழியர் பணியிடை நீக்கம்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Negligence of government hospital in handing over baby

வட சென்னை கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மசூத் - சௌமியா தம்பதியினர். இதில் சௌமிய கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி திடீரென சௌமியாவிற்கு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு கன்னிகாபுரம் பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது. அதனால் சாலையில் தண்ணீர் இருந்ததால் சௌமியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்பதால் இறந்துவிட்டதாக அருகிலிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீன்பாடி வண்டி உதவியுடன் குழந்தை முதலில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சௌமியாவையும், குழந்தையையும் கொண்டு சென்றனர். அங்கு சௌமியாவிற்கு தேவையான அனைத்து சிகிச்சையும் அளித்துள்ளனர். 

பின்னர் இறந்த குழந்தையை தம்பதியிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இறந்த குழந்தையை துணியால் சுற்றி கொடுக்காமல், மருத்துவமனை பிணவறை ஊழியர் அட்டைபெட்டியில் வைத்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரத்தில், அரசு மருத்துவமனையின் பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெற்றோர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பிரேத பரிசோதனை செய்தால் உடல் முழுவதும் வெள்ளை துணிகளை கட்டிக்கொடுப்பது வழக்கம். ஆனால் பெற்றோர்கள் குழந்தையின் உடலை துணிகள் வைத்து சுற்றித்தர வேண்டும் என கேட்டிருந்தால் நாங்கள் சுற்றிக் கொடுத்திருப்போம். அவர்கள் எதையும் கேட்கவில்லை” என்று விளக்கமளித்துள்ளார். 

Next Story

வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று சென்னை வருகை 

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Central team to visit Chennai today to inspect flood damage

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். 

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பாதிப்பு, நெற்பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு என பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் முதல் கட்ட நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ. 5,060 கோடி கோரியிருந்த நிலையில், மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.450 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் ஒரு குழு இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.