கடந்த மாதம் செப்.12 ஆம் தேதி சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த ஐடி பெண் ஊழியர் சுபஸ்ரீ சாலையில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து லாரி மோதி பலியான சம்பவத்தில் தமிழக அரசிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_39.jpg)
அந்த மனுவில் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்எனவும், இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும், பேனர் வைப்பதை தடுக்க பல்வேறு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் எனவும்குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கானது விடுமுறைக்கான சிறப்பு அமர்வுநாளை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)