விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய் நல்லூர் பகுதியில் குடிகாரர்களை கண்டித்து பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

Advertisment

students protest against tasmac wine shop

திருவெண்ணைய் நல்லூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள 15 க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 1000 த்திற்கு மேற்பட்ட மாணவர்கள்படித்து வருகிறார்கள்.

Advertisment

இந்த பள்ளி அருகே அரசின் டாஸ்மார்க் கடை ஒன்று உள்ளது. இங்கு குடிக்க வரும் குடிகாரர்கள், குடித்துவிட்டு போதையில், பள்ளிக்கு வந்து செல்லும் பெண் பிள்ளைகளிடம் சீண்டல், கிண்டல் கேலி, வக்கிர பேச்சு என அளவுக்கு மீறி நடந்து வருகிறார்கள். இது சம்பந்தமாக ஆசிரியர்கள் தட்டி கேட்டால் அவர்களையே மிரட்டுகின்னறனர் அந்த போதை ஆசாமிகள்.

இதனை கண்டு கோபமுற்ற மாணவர்கள்,அவர்களே பள்ளிக்கு முன்பு உட்கார்ந்து குடிகாரர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்களின் இந்த போராட்டத்தை கண்டு பொது மக்கள் தங்கள் ஆதரவை இந்த போராட்டத்திற்கு தந்துள்ளார்.

Advertisment