Skip to main content

“மாணவிகள் புகார் கொடுத்திருக்கிறார்கள்; அறிக்கை வெளிவரும்போது தெரியும்” - மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமரி

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

'Students have complained; We will know when the report comes out'- State Women's Commissioner Thalavi Kumari interview

 

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி ஒருவர் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ''ஒரு மெயின் சீனியர் ஸ்டாப். அவர் பெயர் ஹரிபத்மன். அவரை இங்கே தங்க வைத்து வீடு எல்லாம் கொடுத்து மரியாதை செலுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவருக்கு தகுதியே கிடையாது. அவர் எங்கள் பிள்ளைகளுக்கு வார்த்தைகளால் தொல்லை கொடுக்கிறார். பாலியல் தொல்லை கொடுக்கிறார். பார்க்கின்ற பார்வையே சரியில்லை. இன்னும் 3 பேர் இருக்காங்க சஞ்சிதலால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணன். சஞ்சிதலால் பசங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மிச்சம் இரண்டு பேர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள்'' என்றார். 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த கொடுமைகள் நடைபெற்று வருவதாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கும், மத்திய கலாச்சாரத்துறைக்கும் மாணவிகள் ஆன்லைன் மூலம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

 

'Students have complained; We will know when the report comes out'- State Women's Commissioner Thalavi Kumari interview

 

இதுவரை எழுத்துப்பூர்வமாக மாணவிகள் யாரும் புகார் அளிக்கவில்லை என்று சென்னை கூடுதல் காவல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்த நிலையில், காலை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, கல்லூரி வளாகத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''ஜூம் காலில் ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினேன். நேரில் 12 பேரிடம் விசாரணை நடத்தினேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான புகார்களை சொல்கிறார்கள். இதையெல்லாம் நான் அறிக்கையாகத்தான் சொல்ல முடியும்.

 

எல்லோரும் கல்லூரி மாணவிகள் எனவே வெளியில் சொல்ல முடியாது. அவர்கள் என்னை நம்பி சொல்லி இருக்கிறார்கள். அதை நான் அறிக்கையாக அரசிடம் கொடுப்பேன். எழுத்துப்பூர்வமாக புகாரும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு பெண் மட்டும் வாபஸ் வாங்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஆனால் பல பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். நான்கு பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைக்கு கல்லூரி டைரக்டரை பார்த்து பேச இருக்கிறேன். அப்படி அவர் வர முடியவில்லை என்றால் நான் கல்லூரிக்கு வருவேன். மாணவிகளிடம் போராட்டத்தை நிறுத்திவிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். கண்டிப்பாக இந்த அரசு எதுவாக இருந்தாலும் நேர்மையாக செய்யும் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறேன். பழைய மாணவிகளும் 3 பேர் என்னிடம் பேசியுள்ளனர். எழுத்துப்பூர்வமாக புகாராக கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். மாணவிகள் விவகாரம் என்பதால் கவனத்துடன் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.