Students of Cuddalore District Achieve All India Kickboxing Competition

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சத்திரபதி சிவாஜி இன்டோர் ஸ்டேடியத்தில் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டி ஜூனியர் மாணவர்களுக்கு மே 21 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது.

Advertisment

இதில் கடலூர் மாவட்ட அமைச்சூர் கிக் பாக்ஸிங் மாணவர்கள்சென்சாய். வி.ரங்கநாதன் தலைமையில் தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்ஸிங் அணியுடன் இணைந்து லைட் காண்டாக்ட் மற்றும் பாயின்ட் ஃபைட் . பிரிவில் கடலூர் மாவட்ட மாணவர்கள். பி.கிரித்திஷ் முதல் பரிசும், லைட் கான்டக்ட் பிரிவில் வி.முகுந்தன் இரண்டாம் பரிசும், லோகிக் பிரிவில் மாணவி. எம்.எஸ்.ஆதிர சகானா மூன்றாம் பரிசும் பெற்று தமிழகத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

Advertisment

இப்போட்டியில் தேசிய நடுவராக. ஆர் ரவிக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தலைவர் சுரேஷ்பாபு, கடலூர் மாவட்டவீரு கிக் பாக்ஸிங் சங்கத்தலைவர் சென்சாய்.ரங்கநாதன், செயலாளர் சத்யராஜ், பயிற்சியாளர் சுபாஷ் பிரத்தியூனன், டீம் மேனேஜர் திவ்யா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள்.