Students clash at Mannargudi Government College!

Advertisment

மன்னார்குடி அரசு கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட கடும் மோதல்பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள மன்னை ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன் அபினேஷ் என்பவர் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காததால் முதலாமாண்டு மாணவன் அபினேஷை கண்டிப்பதுபோல், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மாலை கல்லூரி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்ற போது இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவனை பேருந்து நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலாமாண்டு மாணவனை தாக்கிய இரண்டாம் ஆண்டு மாணவன் தனது கூட்டாளிகளுடன் தப்பி ஓடியுள்ளனர்.

Advertisment

மன்னார்குடி கல்லூரியில் ராகிங் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த போதிலும் கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் அதனால் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கல்லுரியில் பயிலும் சக மாணவர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவ மாணவிகள் மத்தியில் தொடர்ந்து பதற்றமும் பீதியும் நிலவி வருகிறது.