Skip to main content

எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் நீட் தேர்வில் வெற்றி! 

Published on 18/02/2022 | Edited on 19/02/2022

 

Student from simple family wins NEET exam!

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ளது நெடுங்குளம் கிராமம். இது முறையான போக்குவரத்து வசதி இல்லாத ஒரு குக்கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி - பூங்காவனம் தம்பதியின் மகன் தமிழ்செல்வன். நீட் தேர்வு அறிமுகமான பிறகு பெற்றோர்கள் தங்களது சொத்துக்களை விற்று பல லட்சங்களை செலவு செய்து தங்களது பிள்ளைகள் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், மதுரை போன்ற பெரு நகரங்களில் இதற்காகவே உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து ஆண்டுக்கணக்கில் படித்து விட்டு நீட் தேர்வில் கலந்து கொள்கிறார்கள்.

 

அதுமட்டுமின்றி தமிழகத்தை கடந்து கேரளாவுக்கு சென்று கூட நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டுள்ள தனி பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து நீட் தேர்வில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோல்வி அடைகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், ஏழை எளிய நடுத்தர குடும்பத்து பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் விதத்தில் திட்டக்குடி சுற்று பகுதியில் உள்ள கிராம பள்ளி மாணவ மாணவிகளுக்காக திட்டக்குடியில் ஐயப்பன் டுடோரியல் சென்டர் வைத்து நடத்திவருகிறார் குமார் ஜி. இவரது சென்டரில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. 

 

Student from simple family wins NEET exam!

 

இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து தமிழ்செல்வன் நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதிய தமிழ்செல்வன், வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சந்தோஷத்தை தனது பயிற்சி ஆசிரியர் குமார் ஜியை சந்தித்து அவரிடம் தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அங்கு படித்த முன்னாள் இன்னாள் மாணவர்கள் தமிழ்செல்வனுக்கு சால்வை அணிவித்தும் பரிசு வழங்கியும் தங்களது சந்தோஷத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 


ஆசிரியர் குமார் ஜி மாணவனுக்கு ஸ்டெதஸ்கோப் பரிசளித்து பாராட்டினார். தமிழ்செல்வன் போன்று இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் படிப்புகளில் நன்கு படித்து தேர்ச்சி பெற வேண்டும் அதற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் தமிழ்செல்வன் என்று பாராட்டி வாழ்த்தி பேசினார். ஒரு குக்கிராமத்தில் படித்து பெரிய பின்புலம் இல்லாமல் எளிய மாணவனான தமிழ்செல்வன் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது திட்டக்குடி பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.