Skip to main content

எரிந்த நிலையில் கிடந்த மாணவி... மெத்தனம் காட்டிவரும் காவல்துறையினர்!!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

student burnt and passed away near the school

 

திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் மலைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த ஒன்பது வயதான மாணவி, திடீரென பள்ளியின் பின்புறத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர், “என் மகள் சாவுக்குப் பள்ளியின் ஆசிரியர்கள்தான் காரணம்” என்று கூறி போலீசில் புகார் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேரை போலீசார் தீவிர விசாரணை செய்தும்வருகிறார்கள்.

 

அதோடு மாணவி சாவுக்கு என்ன காரணம் என போலீசார் தீவிர விசாரணை செய்துவருகிறார்கள். அப்படியிருந்தும், குற்றவாளிகள் யார் என்று கடந்த ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிவருகிறார்கள். இந்நிலையில், திடீரென பள்ளிக்கூடத்தைப் புதுப்பிப்பதற்காக தொழிலாளர்களைவிட்டு பள்ளிக்கூடத்திற்குப் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் களமிறங்கியது. இந்த விஷயம் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காதுக்கு எட்டவே, “மாணவியின் சாவுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யாமல், பள்ளிக்கூடத்தை சுத்தப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். அதனால் அந்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று குரல் கொடுத்தனர்.

 

student burnt and passed away near the school

 

அதைத் தொடர்ந்து பள்ளியின் பராமரிப்பு பணிகள் மற்றும் பெயிண்ட் அடிக்கும் வேலைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவி மரணத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் மெத்தனம் காட்டிவருகிறார்கள் என்று கூறி மேல் மலைப்பகுதியில் உள்ள கூக்கள் கிராமத்து மக்கள், மாணவி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அதனால் எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த விஷயம் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்குத் தெரியவே, உடனே அந்த கூக்கல் கிராம மக்களை சமாதானப்படுத்தி கூடிய விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம் என உறுதி கூறியதின் பேரில், உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் மாணவி சாவில் மர்மம் நீடிப்பதால், போலீசாரும் உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திணறிவருகிறார்கள். இருந்தாலும் மாணவியைக் கொடூரமாக மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டது மேல்மலை மற்றும்  கீழ்மலை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது கூக்கல் கிராமத்தைத் தொடர்ந்து, மற்ற பகுதியில் உள்ள மலைக் கிராம மக்களும் மாணவிக்கு ஆதரவாக கூடிய விரைவில் தொடர் போராட்டத்தில் குதிக்க தயாராகிவருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.