Skip to main content

நீட் தேர்வு பயிற்சி மைய மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி; திருப்பூரில் பரபரப்பு

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

A student attempted jumping from the floor of the NEET exam training center; stir in Tirupur

 

திருப்பூரில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து மாணவி ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள படியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தி. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பயிற்சி மையம் ஒன்றில் நீட் பயிற்சி எடுத்து வந்தார் ஆனந்தி. இந்நிலையில் இன்று மாலை வழக்கம்போல் ஆனந்தியை அவரது தந்தை நீட் தேர்வு பயிற்சி மையத்தில் விட்டுவிட்டுக் கிளம்பும்போது பயிற்சி மைய மாடியிலிருந்து ஆனந்தி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்பொழுது படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ன காரணத்திற்காக மாணவி தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

'வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு'-தலைகுனிய வைத்த சிறுமிகளின் வைரல் வீடியோ!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
shocking video of school girls

திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக  அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள்  பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க.  உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.