Skip to main content

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்; நோயாளிகள் பாதிப்பு

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

Striking Nurses; Patients affected

 

புதுச்சேரியில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பாதிப்படைந்தனர்.

 

புதுச்சேரி மாநில சுகாதாரத்துறையில் செவிலிய அதிகாரிகளின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் காலியாக உள்ள செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பதவி மறுசீரமைப்பு செய்ய வேண்டும்; புதிய செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்க வேண்டும்; 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட நர்சிங் அலவன்ஸ் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; கொரோனா ஒப்பந்த செவிலிய அதிகாரிகளைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மதர் தெரசா பட்ட மேற்படிப்பு மையத்தில் செவிலிய பயிற்சி முடித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை செவிலியர்கள் 2 மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் பணிகளைப் புறக்கணித்த செவிலியர்கள், சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஒன்று கூடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுச்சேரி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே செவிலியர்கள் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn

 

புதுச்சேரியில் ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

 

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்துள்ளது பங்கூர். அந்த பகுதியில் பிரபு என்பவர் ஷங்கர் ஒயின்ஸ் என்ற தனியார் ஒயின்ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பத்து மணிக்கு அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில், ஒருவர் கீழே இறங்கி கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை கடையின் மீது வீசினார். அது பயங்கர சட்டத்துடன் வெடித்துச் சிதறியது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதோடு, சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். விசாரணையில், நாட்டு வெடிகுண்டு வீசியது அதியூர் பகுதியைச் சேர்ந்த செல்வா என்பது தெரிய வந்தது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள இளைஞர் செல்வாவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பிரசவம் பார்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்? - செவிலியர் பணியிடை நீக்கம்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

nn

 

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மணமேல்குடி அரசு மருத்துவமனையில், அதேபகுதியைச் சேர்ந்த சரவணன் தனது மனைவி சிந்துவுக்கு பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்த நிலையில், பிரசவம் பார்க்க செவிலியர் அமுதா ரூ.5 ஆயிரம் கேட்டு சிந்துவின் உறவினர்களுடன் தகராறு செய்ததாக வெளியான வீடியோ வைரலாக பரவியது. 

 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்நிலையில், இன்று திங்கள் கிழமை பிரசவம் பார்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து செவிலியர் அமுதாவை பணியிடை நீக்கம் செய்வதாக புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஸ்ரீபிரியா தேன்மொழி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்