Skip to main content

சிறுவனை அலறவிட்ட தெரு நாய்கள்; வைரலாகும் வீடியோ

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

Stray dogs chased child boy

 

சாலையில் சென்றுகொண்டிருந்த அப்பாவி சிறுவனை ரவுண்டி கட்டி துரத்தும் தெரு நாய்களின் வீடியோ, இணையவாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டிக்கு அருகே உள்ளது லிங்கம நாயக்கன்பட்டி கிராமம். இந்தப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால்  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் உள்ளனர்.

 

பணி முடித்து வருவோரை தெரு நாய்கள் கூட்டமாகத் துரத்துகின்றன. மேலும், வாகன ஓட்டிகளையும் நாய்கள் துரத்திச் செல்வதால், எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி வாகனங்களில் இருந்து கீழே விழுந்து விபத்தும் ஏற்படுகிறது. நாய்கள் தொல்லையால் பல தரப்பினரும் அச்சத்துடனேயே சாலைகளில் சென்று வருகின்றனர். 

 

இந்த நிலையில், எட்டு தெரு நாய்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு சிறுவனை அந்தத் தெரு முழுவதும் துரத்தி வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தெரு நாய்களிடமிருந்து அந்தச் சிறுவனைக் காப்பாற்றியுள்ளனர். அதன்பிறகு, சிறு காயங்களுடன் அந்தச் சிறுவன் உயிர் தப்பியுள்ளார். இதனையடுத்து, தெரு நாய்களிடம் சிக்கிய சிறுவன் கதறி அழும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர்.