Skip to main content

நின்றுபோன திருமணம்... ஏழு லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மணமகன் புகார்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

Stopped marriage ... Groom complains for seven lakh compensation

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது கடம்புலியூர் கிராமம். அங்கு வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் தனது தோழிகளுடன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாட்டு கச்சேரியில் நடனமாடினார். இதனால் கோபமுற்ற மணமகன் மணப்பெண்ணைக் கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்கு கோபித்துக்கொண்ட மணப்பெண் மணமகனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினார். இதனால் கடந்த 19ஆம் தேதி நடைபெற இருந்த திருமணம் திடீரென நின்று போனது. இதனால் மணமகன் வீட்டார் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

 

இந்த நிலையில் திருமணத்திற்கு வருகை தந்திருந்த செஞ்சியைச் சேர்ந்த உறவுக்கார வாலிபர் ஒருவரை மணமகனாகத் தேர்ந்தெடுத்து உடனடியாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமகளின் கன்னத்தில் அறைந்த மாப்பிள்ளை, திருமணம் நின்றுபோன கோபத்தில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் திருமண வரவேற்பு விழாவில் நடைபெற்ற பாட்டுக் கச்சேரியின் போது என்னையும் அந்த பெண்ணையும் சேர்ந்து நடனமாடச் சொல்லி வற்புறுத்தினார்கள். அப்போது நடனமாட எனக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டேன். ஆனால் அந்தப் பெண்ணின் கையை பிடித்து கொண்டு வேறு ஒருவர் நடனம் ஆடினார். இப்படி மற்றவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடலாமா?

 

இது தவறு என்று சுட்டிக் காட்டியதற்காக அந்தப் பெண்ணும் அவரது உறவினர்களும் என்னை அடித்தார்கள். இதனால் திருமணம் நின்று போனது. நானும் எனது குடும்பத்தினரும் அவமானப்படுத்தப்பட்டு, வேதனை அடைந்தோம். திருமண நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை சுமார் 7 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. தற்போது எனது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி எனக்கு நஷ்ட ஈடாக ஏழு லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர வேண்டும். மேலும் என்னை ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.