Stamped paper color xerox pudukkottai court police investigation

Advertisment

புதுக்கோட்டை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் போலி முத்திரைத்தாள் பயன்படுத்தி ரூபாய் 27,66,500 மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், முத்திரைத்தாளை கலர் ஜெராக்ஸ் எடுத்து 75 வழக்குகளில் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி குறித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற தலைமை நிர்வாக அதிகாரி, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. முத்திரைத்தாள் மோசடியால் நீதிமன்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.

Advertisment