தஞ்சை மாவட்டம் சித்தை பகுதியில் 3வது நாளாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை துவக்கி உள்ளார். தஞ்சை அண்ணப்பன்பேட்டையிலிருந்து பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் மெலடோ, இருப்புதலை, அம்மாபேட்டை வரை பிற்பகலில் செல்கிறார். இதன்பிறகு திருவாரூர் மாவட்டம் நிராமங்கலத்தில் மீட்பு பயணம் முடிவடைகிறது. இந்த பயணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு விவசாய சங்க அமைப்பினரும் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 7ம் தேதி பிற்பகலில் திருச்சி முக்கொம்பில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். இரண்டாவது நாளாக நேற்று தஞ்சாவூர் சூரக்கோட்டைகியல் இருந்து ஸ்டாலின் மீண்டும் பயணத்தை தொடங்கினார்.