Skip to main content

கோடையில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின்!

Published on 09/05/2019 | Edited on 14/05/2019

வருகிற 19 ம்தேதி திருப்பரங்குனறம், அவரக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் உள்பட  நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

 

இந்த இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டமன்ற தொகுதிளில் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு அரவாக்குறிச்சியில் முடித்தார். 

 

dmk

 

அதன்பின் கொடைக்கானலுக்கு தனது மனைவியுடன் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க வந்த ஸ்டாலினை மாவட்ட எல்லையில் கழக துணை பொதுச்செயலாளர் ஐ‌.பெரியசாமி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையிலான  கட்சி பொறுப்பாளர்கள் சிலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

 

 

அதைத்தொடர்ந்து  ஸ்டாலின் அவரது துணைவியாருடன் கொடைக்கானல் சென்றவர் அங்குள்ள கால்டன் ஸ்டார் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

 

dmk

 

கோடையில் இரண்டு நாள் ஓய்வு எடுத்து வரும் ஸ்டாலினை பார்க்க கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அவர் கொடைக்கானலில் படகு சவாரி செய்தார். அப்போது அருகிலிருந்த சுற்றுலா பயணிகள் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் படகு சவாரி செய்யும் காட்சிகளை செல்போனில் படம் பிடித்தனர். அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன பள்ளிக்கல்வித்துறை!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
Department of Education gave good news to students

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி (06.06.2024) அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகளைத் திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார். அதில், “பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும். மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்கூரைகளில் குப்பைகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜுன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து பள்ளிகள் ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'இனி சுட்டெரிக்கும்...' - வானிலை ஆய்வு மையம் கொடுத்த இன்ஸ்டன்ட் அப்டேட்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
nn

இன்று முதல் தமிழக மற்றும் புதுச்சேரியில் மீண்டும் படிப்படியாக 31ஆம் தேதி வரை வெப்பநிலை உயரக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். நாளை முதல் 31ஆம் தேதி வரை வெப்பநிலை புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக இருக்கும். சென்னையைப் பொறுத்தவரை 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்தாலும் தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.