'Stalin insist on withdrawing this plan which is against the national interest'!

பாதுகாப்புத்துறையில் 'அக்னிபத்' திட்டம் மூலம் தற்காலிக வேலை வழங்க முக்கிய அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர்.'அக்னிபத்' திட்டத்திற்குபகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Advertisment

இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் தேச நலன் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தேச நலனுக்கு எதிராக உள்ள இந்த 'அக்னிபத்' எனும் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.