குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கானமுன்னெடுப்புகளைகுடியரசுதலைவர் வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிவேட்பாளராகதிரௌபதிமுர்முஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராகயஷ்வந்த்சின்ஹாஅறிவிக்கப்பட்டுள்ளார்.
யஷ்வந்த்சின்ஹாநேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதிமுர்முஇன்று தமிழகம் வருகை புரிந்துள்ளார். சென்னை வந்துள்ள திரௌபதிமுர்முநுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணிக்கட்சிதலைவர்களைசந்திக்க இருக்கிறார். இதற்காக நேற்றே அதிமுகவின்ஓபிஎஸ்,இபிஎஸ்ஆகியோருக்குதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்புவிடுத்திருந்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட இபிஎஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி,''அதிமுகவின்முழு ஆதரவுடன் திரௌபதிமுர்முஇமாலயவெற்றி பெறதுணைநிற்போம்.குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் பழங்குடியின பெண்ணைமுதல்வர் ஸ்டாலின் ஆதரிக்கவில்லை. திரௌபதிமுர்முவைஆதரிக்காமல் சமூகநீதிஎனப்பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். திமுக- காங்கிரஸ் சூழ்ச்சியால் 2012குடியரசுத்தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்மா வெற்றிபெறமுடியவில்லை'' என்றார்.