SSI police incident in thenkasi

Advertisment

துப்பாக்கியால் சுட்டு எஸ்.எஸ்.ஐ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் எஸ்.எஸ்.ஐ ( சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்) பார்த்திபன் தங்கி இருந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட பார்த்திபன் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனின் காவல் பணிக்காக வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான பார்த்திபனின் தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment