SRMU people struggle in trichy

திருச்சி, பொன்மலை ஆர்மரிகேட் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், ரயில்வே துறையில் உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் கோஷமிடப்பட்டது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘மத்திய மோடி அரசு கடந்த இரண்டு வருடமாக ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கவில்லை. இந்நிலையில் தற்போது அக்னிபாத் திட்டத்தின் கீழ் சுமார் 4 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இராணுவ வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெற்று வருகிறது.

Advertisment

இரயில்வே துறையில் பல லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கும் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது போல ஒப்பந்த அடிப்படையில் சில வருடங்களுக்கு மட்டும் ஆள் எடுக்கும் நிலை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும்’ என மத்திய அரசை வலியுறுத்தினர்.