/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maths-teacher-art.jpg)
ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டு இருக்கும் போதுஉயிரிழந்தசம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில்செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 23 வருடங்களாக கணித ஆசிரியராக பாண்டுரங்கன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று (21.03.2023) வழக்கம் போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது ஆசிரியர் பாண்டுரங்கன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் உடனடியாக அருகில் இருந்த சக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அங்கு விரைந்து வந்த சக ஆசிரியர்கள் மயங்கி விழுந்த ஆசிரியர் பாண்டுரங்கனை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆசிரியரின் உடல்அவரது சொந்த ஊரான விருத்தாசலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும்சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)