Skip to main content

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் போராட்டம்!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

SRI LANKA TAMILARS TRICHY PRISON

திருச்சி முகாம் சிறையில் அடைக்கபட்டுள்ள இலங்கை தமிழர்கள் கடந்த ஜூன் 9- ஆம் தேதி முதல் இன்றுவரை கடந்த 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த போராட்டத்தின் நோக்கம் தங்கள் மீதான வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கபட்டு, தண்டனை காலம் முடிந்தும் சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டதினை நடத்தி வருகின்றனர்.

 

அவர்களின் போராட்டத்தைக் குறித்து அறிந்துக் கொள்ள அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையகத்தின் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் நேரில் சந்தித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

மேலும் அவர்களின் கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவர் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இலங்கை தமிழர்கள் தங்களது காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாதயாத்திரை விபத்தில் பலியான 5 பேர்; நிவாரணத் தொகையை வழங்க அமைச்சர்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
5 lose their live in padayatra accident; Ministers to provide relief amount

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் பலியான 5 பக்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் வளப்பக்குடி கிராமம் அருகே நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கண்ணுகுடிப்பட்டி என்கிற ஒரே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனாம்பாள் (27), மீனா (26), தனலட்சுமி (36) ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் நடந்து சென்ற சங்கீதா படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கண்ணுக்குடிப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீண்டும் நீதிமன்றக் காவல் விதிப்பு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Rameswaram Fishermen remanded in court

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இத்தகைய சூழலில் தான கடந்த ஜூன் 22 ஆம் தேதி (22.06.2024) காலை வழக்கம் போல் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விசைப்படகில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரைக் கைது செய்தனர். 

Rameswaram Fishermen remanded in court

அதாவது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கைதான 22 மீனவர்களையும் காங்கேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அதன் பிறகு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மேலும் தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரைக் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதே சமயம் தமிழக மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது கடந்த 5ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் 2வது முறையாக மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஜூலை 18 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று (18.07.2024) மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூன்றாவது முறையாக மீண்டும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.