Special Puja; Amit Shah coming to Pudukottai

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதிஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடியவுள்ளது. ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Advertisment

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வர இருக்கிறார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக மூன்று நாட்கள் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடப் போவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில், இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து தமிழகம் வர இருக்கிறார்.

Advertisment

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று புதுக்கோட்டைக்கு வர உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து இன்று மதியம் தனி விமானத்தில் புறப்படும் அவர், திருச்சி விமான நிலையத்திற்கு பிற்பகல் 3 மணிக்கு வர இருக்கிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பழமை வாய்ந்த ராஜராஜேஸ்வரி சத்தியகிரீஸ்வரர் கோவிலுக்கு செல்ல இருக்கிறார். அங்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். பின்னர் அங்கிருந்து ஆந்திராவுக்கு செல்ல இருக்கிறார்.