sp subramanyam incident dmk mk stalin

Advertisment

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

எஸ்.பி.பி.யின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அதன் ஒரு பகுதியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தஇரங்கல் செய்தியில், "என்றும் இளமை மாறாத இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி. காலம் அவரைப் பிரித்தாலும் காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். இயந்திரம்போல் மாறிவிட்ட மக்களின் மனஅழுத்தத்திற்கு இயற்கையான மாமருந்தாக வாய்த்தவர்" என்று தெரிவித்துள்ளார்.