Skip to main content

‘எப்படியோ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது’ - பிரச்சாரத்துக்கு நடுவே டீக்கடையில் இபிஎஸ்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

'Somehow the problem was solved'-Edappadi Palaniswami at the tea shop

 

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. தமிழக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். 'எப்படியோ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது' என்ற டோனில் தற்பொழுதுதான் பிரச்சார களத்தில் இறங்கி உள்ளது அதிமுக.

 

அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் டீ போடுவது, இஸ்திரி போடுவது என பழைய பாணியை பின்பற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியான தமாகாவை சேர்ந்த யுவராஜ் ஆகியோருடன் சேர்ந்து டீக்கடை ஒன்றில் கூலாக டீ சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

 

இடைத்தேர்தல் போட்டியில் டி.டி.வி.தினகரனின் அமமுக பின்வாங்கியதைத் தொடர்ந்து, நாம் தமிழர், தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகள் ஈரோடு கிழக்கில் தனித்து களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மழைநீர் வடிகால் பணிக்கு செலவிட்ட கணக்கை தர தயாரா? - இபிஎஸ் கேள்வி

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 Are you ready to give an account of the amount spent on rainwater drainage work?-EPS question

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

nn

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, பால் ஆகியவற்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனே இயல்பு நிலைக்கு திரும்ப அரிசி, பருப்பு, பால், மளிகை பொருட்களை வழங்க வேண்டும். தேவையான மருத்துவ வசதிகளையும் உடனடியாக தமிழக அரசு கொடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து உடனடியாக பால் கொள்முதல் செய்து தங்கு தடையின்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் சிறப்பு முயற்சி எடுத்து உடனடியாக நீரை அகற்ற வேண்டும். வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

 

மழை நீர் வடிகால் பணிகள், தொடர்ந்து  மீட்புப் பணிகள் நடக்கும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை அரசு வெளியிட வேண்டும். திமுக அரசு முழு அளவில் மீட்புப் பணியை மேற்கொள்ளாமல், நிவாரண உதவிகளை வழங்காமல் உள்ளது. மழைநீர் வடிகால் பணி முடிந்த ஒவ்வொரு இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கை தர தயாரா? சென்னையில் உள்ள 38,500 பிரதான சாலைகளின் 20,000 சாலைகளின் இப்போது வரை வெள்ளம் தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால் பணி முடிந்த இடங்களில் கால்வாய்களை சரியான முறையில் இணைக்க அரசு தவறிவிட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Chennai High Court verdict on Sasikala's removal from ADMK will go away

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில், சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சசிகலா தரப்பில் கூறியதாவது, “அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்து பொதுச் செயலாளர் ஆன சசிகலாவை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது. இது தொடர்பான நடைமுறையே சட்ட விரோதமானது. கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கவோ அல்லது கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து, நீதிபதிக்கும், சசிகலா தரப்புக்கும் காரசார வாதம் நடைபெற்றது.  

 

இதனை தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “ கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தற்போது வரை தொடர்கிறார்கள். அதனால்,  இடைக்கால பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கியது செல்லும்” என்று கூறினார். 

 

அதே போல், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், “பொதுக்குழு கூட்டங்கள் கட்சி விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டது. அந்த கூட்டங்கள் செல்லும் என்பதை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அடிப்படையிலேயே சசிகலா கட்சியில் இருந்தும், பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்” என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர். 

 

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று (05-12-23) பிறப்பித்தனர். அதில், வி.கே.சசிகலா தொடர்ந்திருந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், சிவில் கோர்ட் உத்தரவை உறுதி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். மேலும், அந்த தீர்ப்பில், “அ.தி.மு.க.வில் பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பு என்பதால் அதில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஏற்புடையதல்ல. எனவே, மனுதாரரான சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்