Skip to main content

வாஷிங் மெஷினில் பதுங்கிய பாம்பு; கோடை காலத்தில் உஷார் !

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

வீட்டில் பயன்படுத்தும் வாசிங்மெஷினில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்த சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ளது கீழக்கரணை மாரியம்மன் கோவில்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. வழக்கம்போல ராஜலட்சுமி துணியை துவைப்பதற்காக வாஷிங் மெஷினில் துணியைப் போட்டுள்ளார். அப்பொழுது மெஷினில் இருந்து வந்த வினோத சத்தத்தை அடுத்து அவர் ஆராய்ந்து பார்க்கையில் உள்ளே பாம்பு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக மறைமலை நகர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த சாரைப் பாம்பை பிடித்தனர்.

 

இதேபோல் அண்மையில் கேரளாவில் பள்ளி மாணவியின் ஷூவில் பாம்பு ஒன்று மறைந்திருந்தது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் பள்ளி மாணவியின் புத்தகப் பையில் பாம்பு இருந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கோடை காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் தீயணைப்புத் துறையினர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாரை பாம்பைச் சமைத்துச் சாப்பிட்ட சம்பவம்; வைரல் வீடியோவால் வசமாக சிக்கிய இளைஞர்

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Youth arrested for eating snake juice

திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30). இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.

இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன்  தலைமையில் வனவர் மற்றும் வனப் பணியாளர்கள்  இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெருமாபட்டு கிராமத்திற்குச் சென்று ராஜ்குமாரை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கறியாக்கி சாப்பிட்டதை ஒப்புக்கொண்டார். எதற்காக இப்படி செய்தாய் எனக்கேட்ட அதிகாரிகளிடம், அப்படி சாப்பிட்டால் உடல் பலம் பெருகும், ஆண்மை அதிகரிக்கும்னு சொன்னாங்க. அதான் பாம்பை தேடிப்பிடிச்சி அடிச்சி சாப்பிட்டேன் என்றதைக் கேட்டு  அதிர்ச்சியடைந்தனர்.  இதையடுத்து அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். 

Next Story

'வந்துட்டேன் அம்மா...'- 10 மணி நேரத்திற்கு பின் குட்டியானை மீட்பு

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
 'I have come mother...'- Rescue the cub after 10 hours

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் அதிகப்படியாக உலா வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பந்தலூர் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று இரவு யானை கூட்டம் ஒன்று வந்துள்ளது.

அப்பொழுது கூட்டத்திலிருந்த குட்டி யானை 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதனால் உடன் வந்த யானைகள் சத்தமிட்டது. இரவு முழுக்க குட்டி யானை கிணற்றுக்குள் கிடந்தது. யானைக் கூட்டமும் அங்கிருந்து நகராமல் சத்தமிட்டுக்கொண்டே இருந்தது. யானை கூட்டத்தின் சத்தம் ஊர் மக்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

என்ன நடந்தது என அந்த பகுதி மக்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் காலையில் சென்று பார்த்த பொழுது கிணற்றுக்குள் குட்டி யானை விழுந்தது தெரிந்தது. உடனடியாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைக் கூட்டங்களை விரட்டி விட்டு குட்டி அணையை மீட்கும் பணியில் இறங்கினர்.

 'I have come mother...'- Rescue the cub after 10 hours

தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்றது. ஜேசிபி மூலம் பக்கவாட்டில் குழிதோண்டி குட்டியானை வெளியே வரும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. அதன் வழியாக குட்டியானை வெளியே வந்தது. அதன்பிறகே வனத்துறையினரும், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது உயிருடன் மீட்கப்பட்ட குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் பணியை வனத்துறை தொடங்க உள்ளது. குட்டியானையை மீட்கும் பணியை தாய் யானை புதர் வழியாக நின்று நோட்டமிட்ட காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.