
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற பேரவை செயலாளர் அலுவலகத்திற்குள் சாரைப்பாம்பு புகுந்ததாக தீயணைப்பு மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தனர். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தீயணைப்புத் துறையினர் உடனடியாக பாம்பு பிடிக்கும் கருவிகளுடன் உள்ளே சென்றுள்ளனர்.
ஒவ்வொரு அறையாகச் சென்ற அந்த சாரை பாம்பு அலுவலகத்திற்கு வெளியே உள்ள புல்வெளிக்குள் புகுந்துள்ளது. புல்வெளியில் சிக்கி உள்ள சாரை பாம்பை தேடும் பணியில் காவல்துறையினரும், தீயணை துறையினரும் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் சாரைப்பாம்பு புகுந்த சம்பவம் அங்குள்ள அலுவலர்கள், ஊழியர்கள் மட்டத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)