வாரிசு வேலை வாங்கிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், சிவகாசி அருகே போலீஸ்காரர் ஒருவரின் தாய் உள்ளிட்ட இருபெண்கள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி, ஆயில் மில் காலனியைச் சேர்ந்த ரவிசிவகாசி மாநகராட்சியில் துப்பரவுபணியாளர் வேலை பார்த்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்புஉடல்நலக்குறைவால் ரவி உயிரிழந்தார். ரவிக்கு ரதிலட்சுமி என்ற மனைவியும்மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.ரவி இறந்ததைத் தொடர்ந்து,வாரிசு அடிப்படையில் அவருடையவேலைக்கு மனைவி ரதிலட்சுமி முயன்றிருக்கிறார். ரவியின் தாய் முருகேஸ்வரியிடம் இதுகுறித்து பேசியிருக்கிறார்.அப்போது முருகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.வாரிசு வேலையை பேரன் ராகுலுக்குகொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.
சிவகாசி ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள முருகேஸ்வரியின் வீட்டில்இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். அங்கு ரதிலட்சுமியின் சகோதரர்ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவாளராகப் பணிபுரியும் காளீஸ்வரன் மற்றும் ரதிலட்சுமியின்உறவினர்கள் இருந்துள்ளனர்.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்முருகேஸ்வரியையும் (வயது 50)உறவினர் தமயந்தி கருப்பாயியையும்(60)காளீஸ்வரன் குத்திக்கொலை செய்துள்ளார்.திருத்தங்கல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகி,காளீஸ்வரனைகைது செய்து போலீசார்விசாரணை நடத்துகின்றனர்.
கொலையான முருகேஸ்வரியின் மகன் கணேசன்பக்கத்து ஊரான எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.