Skip to main content

எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

singer sp balasubramanyam chennai

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

singer sp balasubramanyam chennai

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி.யின் உடலுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், பாடகர் மனோ நேரில் இறுதியஞ்சலி செலுத்தினர். அப்போது, எஸ்.பி.பி. உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார் பாடகர் மனோ.அதேபோல் எஸ்.பி.பி. உடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 

பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் இறுதியஞ்சலி செலுத்தினர்.

 

இதையடுத்து எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது.புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் இறுதிச்சடங்குகளைச் செய்து வருகிறார். இறுதிச்சடங்கு நடைமுறைக்கு பின்னர் காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் செய்யபபடவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எஸ்.பி.பி நினைவிடத்தில் ரசிகர்கள் கண்ணீர்! (படங்கள்)

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நேற்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. 

 

பின்னர் அங்கிருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.  மேலும், 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். இறுதிச் சடங்குகள் முடிந்தபிறகு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவரது ரசிகர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

 

 

Next Story

எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம்! (படங்கள்)

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த எஸ்.பி.பி-க்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதன்காரணமாக மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்தனர்.  தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி.பி. காலமானார். பொதுமக்கள் அஞசலிக்காக அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டது.

 

திருவள்ளூர் அருகே உள்ள தாமரைப்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான இடத்தில் அவரின் உடல் இன்று (26.09.2020) நல்லடக்கம் செய்யப்படும் என்று அவர் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இதற்காக நேற்று இரவு அவரது உடல் தாமரைப்பாக்கத்திற்கு எடுத்துசெல்லப்பட்டது. 

 

தாமரைப்பாக்கத்தில் அவரின் பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதிசடங்குகள்நடைபெற்றன, அப்போது குடும்பத்தினரும் உறவினர்களும் கலந்துக்கொண்டனர். பின்னர், காவல்துறையினர் அணிவகுப்போடு நல்லடக்கம் செய்யும் இடத்திற்கு உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை நிறைவேற்றப்பட்ட பிறகு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.