Singer Mano  son who beat the boys in front of the police

சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன். 20 வயதான இவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், மதுரவாயலைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இரவு பயிற்சி முடிந்த இருவரும் அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளனர். அப்போது, பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள், தங்கள் வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்நேரம் பார்த்து உணவு வாங்கிக்கொண்டிருந்த கிருபா மற்றும் சிறுவன் இருவரையும் அழைத்து மனோவின் மகன்கள் ரஃபிக், சாஹீர் மற்றும் அவரது 3 நண்பர்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால், கிருபாவுடன் வந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோடி ரோந்துப்பணியில் இருந்த காவல்துறையினரை அழைத்து வந்துள்ளார். ஆனால், காவலர்கள் எதிரிலேயே கிருபா மற்றும் சிறுவனைத் தாக்கிய மனோவின் மகன்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள், தகாத வார்த்தைகளிலும் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கிருபாகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், சிறுவனுக்கும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கிருபாகரன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை தரப்பிலிருந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சென்னை வளசரவாக்கம் காவல் காவல்துறையினர், விசாரணைக்காக பாடகர் மனோவின் மகன்கள் உள்ளிட்ட 5 பேரைக் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதையடுத்து, பாடகர் மனோவின் மகன்கள் ரஃபிக், சாஹீர் மற்றும் 3 நண்பர்கள் மீது ஆபசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Advertisment

ஆனால், இதற்கிடையில் மனோவின் 2 மகன்களும் அவருடைய நண்பர் ஒருவரும் தலைமறைவாகி விட்டனர். இதனால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.