Skip to main content

குளத்தை தூர்வாரும் பணிக்கு ரூபாய் 80,000 கொடுத்து உதவிய சிங்கப்பூர் தமிழர்...குவியும் பாராட்டுக்கள்!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள 564  ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இப்பகுதி மக்கள், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தும், இதுகுறித்து கண்டு கொள்ளப்படாமல் இருந்தது.  அரசின் புறக்கணிப்பு பொதுமக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தான் இப்பகுதி இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்கம் (கைஃபா) என்ற அமைப்பை தொடங்கி தங்கள் சொந்தப் பணத்தை கொண்டும், பொதுமக்களிடம் நன்கொடையாக நிதியை வசூலித்து அதன் மூலம் பெரிய குளத்தை தூர்வாரும் பணியில் கடந்த 32 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.  பணிகள் தொடங்கிய முதல் நாளில் அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர் ரூ. 1 லட்சம் நன்கொடையாக கொடுத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு விவசாயிகள், தொழிலாளிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் குளம் சீரமைக்க தாராளமாக நிதியும், மற்ற உதவிகளும் செய்து வருகின்றனர்.

 

Singapore Tamils ​​who contributed Rs. 80,000 to the project For the task of inflating the pond

 

 

இந்நிலையில், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பொன்னாங்கண்ணிக்காடு கிராமத்தினர் மற்றும் கொப்பி பொங்கல் விழாக் குழுவினர் சார்பில் கிராமத்தில் நிதி வசூலிக்கப்பட்டது. இதில் வசூலான தொகை ரூ 1 லட்சத்து 51 ஆயிரத்து 501 ஐ வியாழக்கிழமை அன்று  ஒருங்கிணைந்த கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.  இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாகிகள் பொன்னாங்கண்ணிக்காடு கிராமத்தினர் மற்றும் கொப்பி பொங்கல் விழாக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், இது குறித்து பேசிய விவசாய சங்க நிர்வாகிகள், கிராமத்தினர் உதவிகள் செய்து ஊக்கமளிப்பது எங்கள் பணிக்கு வேகம் கொடுக்கிறது.

 

Singapore Tamils ​​who contributed Rs. 80,000 to the project For the task of inflating the pond

 

 

இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்கள் நீர்நிலை சீரமைப்பை தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களும் உதவிகள் செய்ய தயாராக உள்ளனர். விரைவில் தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை மீட்டு நிலத்தடி நீரை பெருக்கி வறட்சியில்லாத மாநிலமாக்க முடியும். அதனால் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞாகள் குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க முன்வர வேண்டும் என்றனர். இதே போல தஞ்சை மாவட்டத்தில் ஒட்டங்காடு, கிராமத்திலும் இளைஞர்களால் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் களத்தூரில் தொடங்கிய இளைஞர்களின் நீர்நிலை சீரமைப்பு பணிகள் அப்படியே பரவி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கமல், வடகாடு, மாங்காடு, உள்ளிட்ட பல கிராமங்களிலும் பரவி இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர்.

 


இந்த நிலையில் தான் கொத்தமங்கலத்தில் பணிகளைத் தொடங்கிய இளைஞர்களை ஊக்கப்படுத்த 100 நாள் வேலையில் குளம் வெட்டி சேமித்த ரூ. 10 ஆயிரம் பணத்தை குளம் சீரமைக்க இளைஞர்களிடம கொடுத்தார் ராஜம்மாள் பாட்டி. அதன் பிறகு பலதரப்பிலும் நன்கொடைகள் கிடைத்து வருவதால் பணிகள் 75 நாட்களைக் கடந்தும் தொடந்து நடந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் தங்கள் உண்டியல் சேமிப்பையும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் சிங்கப்பரில் வசிக்கும் எம்.ஆர்.ரமேஷ் என்ற இளைஞர் குளம் சீரமைக்க இயக்கப்படும் ஜேசிபிக்கு ஒரு மாத வாடகை ரூ. 80 ஆயிரத்தை மொத்தமாக வழங்கி இருக்கிறார். இந்த பெரிய உதவிக்காக இளைஞர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

 

 


    

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.