
சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் 31.12.2016 அன்று சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக் கடையில் 3 சவரன் தங்கச் செயின் வாங்கியிருக்கிறார். 2019ஆம் ஆண்டில் அந்தச் செயின் திடீரென அறுந்து விழுந்தது. அப்போது செயின் நடுவே தங்கத்திற்கு பதில் வெள்ளிக் கம்பி கோர்க்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அப்போதே நகைக்கடையில் வந்து முறையிட்டிருக்கிறார் மருத்துவர். தவறு நடந்துவிட்டதை ஒப்புக்கொண்ட நகைக்கடை நிர்வாகம், அதற்குப் பதிலாக வேறு நகை (கையில் அணியும் தங்கக் காப்பு) வழங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்த நகையிலும் கலப்படம். அதாவது, தாமிரம் அதிகம் கலந்து மோசடி செய்தது அம்பலமாகியிருக்கிறது. இதனால், நகைக்கடை மீது மாம்பலம் போலீசாரிடம் புகார் அளித்து, வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனால் இங்கு தங்க நகை வாங்கிய மக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)