Silk Development Industry Equipment Offering Program

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை சார்பில் திருச்சி மண்டல உதவி இயக்குநர் அலுவலகத்தில் 2021-2022ம் ஆண்டுக்கான மாநில திட்டத்தின் கீழ் 50 பட்டு தொழில் விவசாயிகளுக்கு ரூபாய் 26 லட்சம் மானியத்தில் பட்டு வளர்ச்சி நவீன தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Advertisment

தமிழக அரசின் பட்டு வளர்ச்சித் துறையின் கீழ் ஆண்டுதோறும் பட்டு தொழில் செய்துவரும் விவசாயிகளுக்கு நவீன பட்டு வளர்ச்சித் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2021–22ம் ஆண்டிற்கான மாநில திட்டத்தின் கீழ் திருச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த பட்டு தொழில் மேற்கொண்டு வரும் 50 விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரூ.52,500 என்ற விகிதத்தில் மொத்தம் ரூ. 26.26 லட்சம் மானியத்தில் பட்டு வளர்ச்சித் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Advertisment