Skip to main content

'இப்படியெல்லாம் கடத்தி வந்து குடிக்க சொல்லுதா?'-திருவிழாவில் சிக்கிய குடிமகன்கள்!

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

'Should you kidnap all this and ask you to drink?'- trapped in the festival!

 


நெல்லை மாவட்டம் பாபநாசம் ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில். ஒவ்வொரு ஆண்டு ஆடித் திருவிழாவும் இங்கே களைக்கட்டும். அதிகப்படியான பக்தர்கள் இங்கே வருவார்கள். மேலும் இந்த கோவில் வனப்பகுதிக்கு உட்பட்ட இடத்தில் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மது, புகையிலை, சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டுவரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவிழா நேரத்தில் அரசு பேருந்துகளில் மட்டுமே அந்த கோவிலுக்குச் செல்ல முடியும். 

 

 

'Should you kidnap all this and ask you to drink?'- trapped in the festival!

 

'Should you kidnap all this and ask you to drink?'- trapped in the festival!

 

இதனால் பாபநாசம் வன சோதனை சாவடி, காணிக்குடி சோதனை சாவடி எனப் பல இடங்களில் சோதனை நடைபெறும். இந்நிலையில் இந்த திருவிழாவிற்கு மதுவைக் காலில் டேப் போட்டு ஒட்டி எடுத்து வந்த நபர்களை வனத்துறையினர் பிடித்து அவர்கள் கொண்டுவந்த மதுவை அவர்களது கையாலேயே கீழே ஊற்றி அழித்தனர். மதுவை பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்களில் அடைத்து அதனை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் டேப்பை வைத்து முழங்காலில் சுற்றி ஒட்ட வைத்து எடுத்துவந்ததும், வனத்துறையினர் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது. 'இப்படியெல்லாம் கடத்தி வந்து குடிக்க சொல்லுதா' என அங்கிருந்தவர்கள் சிரித்துக்கொண்டே சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.