Skip to main content

கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த இருவர் மீது துப்பாக்கிச்சூடு; காஞ்சிபுரத்தில் பரபரப்பு

 

 Shots fired at two  Confusion in Kanchipuram

 

காஞ்சிபுரத்தில் குண்டுகுளம் பகுதியில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியராக இருந்த இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு பேரையும் துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் இரண்டு நபர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக 20 நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

NN

 

இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். 20 நாட்களாக தேடிவந்த நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில், போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்து அழைத்து வந்த பொழுது இருவரும் தப்பிக்க முயன்றனர். அப்பொழுது போலீசார் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தற்பொழுது பிடிபட்ட இருவரும் காலில் காயமுற்ற நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !