Shots fired at the raider in Madurai Mattuthavani

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ரவுடி ஒருவர் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் ரவுடி வினோத். இவர் மீது மதுரையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த ரவுடி வினோத்தை போலீசார் விசாரித்தனர்.

அதைத் தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்பொழுது போலீசாரிடம் இருந்து தப்பிக்க ரவுடி வினோத் அரிவாளால் தாக்க முற்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த ரவுடி வினோத் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment