Skip to main content

மாலை 6 மணி வரை கடைகள் இயங்கலாம்! –மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

shops

 

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களாக திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்கள் உள்ளன. இதில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் காலை முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவு விடுதிகள் திறக்க அனுமதி என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் உத்தரவிடப்பட்டது. அதன்படி செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் ஊரடங்கால் எந்த பயனுமில்லை என மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல் பொருளாதாரம் படுபாதாளத்துக்கு போயுள்ளது, பொதுமக்களும் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனை அறிந்த அரசு, பெரிய அளவில் வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என எச்சரித்தது. அதனை தொடர்ந்து தற்போது வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவு விடுதிகள் திறக்கும், மூடும் நேரத்தில் மாறுதலை செய்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷினி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எல்லாவிதமான கடைகள் இயங்கலாம் என அறிவித்துள்ளனர். அதேபோல் உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை இயங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களை மூடி சீல் வைப்பது, அதிகபட்ச அபராதம் விதிப்பது என மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் மாஸ்க் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.

Next Story

"ஊருக்குள் வரக் கூடாது அங்கேயே நில்லுங்கள்” - அமைச்சருக்கு எதிர்ப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kanikapuram area People  struggle against Minister Durai Murugan

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராமாபுரம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் சாலையை வழிமறித்து ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

அப்போது ஒரே சமூகத்தினர் உள்ள ஊரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு சாலையில் மரக்கட்டைகளும்,  இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஊருக்குள் நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து நுழைய முயற்சித்த கட்சியினரை ஊருக்குள் வராதே, என்ன செய்தார் எம்.பி. 5 ஆண்டுகளில் சாலை கூட சரியாக போடவில்லை. எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை என எதிர்ப்பை தெரிவித்து ஊருக்குள் வர விடாமல் தடுத்தனர்.  இதனால் அங்கு வாக்குவாதம் ஆகி பரபரப்பாகியது மேலும் அத்துமீறி நுழைந்தால் வாகனத்தின் மீது மது பாட்டிலும், கற்களையும் வீசி கண்ணாடியை உடைப்போம். அசிங்கப்படாமல் போய்விடுங்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்காமல் வந்த வழியே திரும்பிச் சென்றனர். தனது சமூகத்தைச் சேர்ந்த நபர்களிடம் வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் துரைமுருகனை அதே சமூகத்தினர் விரட்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.