Shocked by the CCTV footage!

முறையற்ற தொடர்பிலிருந்த காதலுனுக்காக பெண் ஒருவர் நடுரோட்டில் தீக்குளித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வானை என்ற பெண், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்குக் குடிபெயர்ந்தது கே.வி.ஆர் நகரில் வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்துவந்தார். திருமணமான தெய்வானைக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், அவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் அவர் வேலை செய்துவந்தார். அப்போது அதே பனியன் கம்பெனியில் வேலை செய்துவந்த ஒருவருடன் தெய்வானைக்கு முறையற்ற தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த நபரும் ஏற்கனவே திருமணமானவர் எனக் கூறப்படும் நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தெய்வானை வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

தங்களை சேர்த்துவைக்கும்படி காவல் நிலையத்திலும் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இருவரையும் கூப்பிட்டு விசாரணை செய்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி போலீசார்அனுப்பிவைத்தனர். ஆனால் தொடர்ந்து அந்த நபரை தன்னுடன் சேர்த்துவைக்க வேண்டும் எனக் கூறிவந்த நிலையில், பனியன் கம்பெனி அலுவலகத்திற்கு முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அந்தப் பெண் மேலே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றினர். இதுதொடர்பாக திருப்பூர் மத்திய காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது அப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.