Skip to main content

’சிம்புதேவனை தூக்கிட்டு ஷங்கரே டைரக்ட் பண்ணட்டும்..’- வடிவேலு

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

 


இம்சை அரசன் 23ம் புலிகேசி வெற்றிப்படத்திற்கு பின்னர், இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் ஆரம்பிக்கப்பட்டது. இயக்குநர்  ஷங்கரே இப்படத்தையும் தயாரிப்பதாகவும், சிம்புதேவன் இயக்குவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின.   வடிவேலு இப்படத்தில் நடிக்க வரவில்லை என்று கடந்த சில வருடங்களாகவே பஞ்சாயத்து நடந்துகொண்டிருப்பதாக தகவல். 

 

v

 

இந்நிலையில் இது குறித்து வடிவேலு,   ‘’சிம்புதேவன் பெரிய டைரக்டர் கிடையாது.  அவனுக்கு படம் வரையத்தெரியும்.   இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின்போது வரைஞ்சு காட்டுவான். பெரிய டைரக்டர்கள் மாதிரி நடிச்சுக்காட்ட தெரியாது.  நடிச்சுச்காட்டுய்யான்னு சொன்னா ஹி..ஹி..என்று நிற்பான்.    

 

v

 

24ம் புலிகேசி படத்துக்கு ரெண்டு வருசமா அவனோட உட்கார்ந்து கதைக்குள்ள இறங்கி வொர்க் பண்ணியிருக்கிறேன்.   இப்ப வந்து நான் சொல்லுறது கேளுன்னு சொன்னா எப்படி?  பெரிய டைரக்டர்கிட்ட ரொம்ப போக முடியாது.  சின்ன ஆளுன்னுதான் நானும் முழுசா இறங்கி கதையை ரெடி பண்ணுனேன்.  மூணு கேரக்டரா இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்லி அதை மாதிரியே செய்தோம்.

 

ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரு பாட்டுதான் எடுத்தோம்.  அதுக்குள்ள எனக்கு  உடை தைப்பவனை விரட்டி விடுறாங்க.  என் மேக்கப் மேனை விரட்டி விடுறாங்க.  கத்தி  சண்டை சொல்லித்தருபவரை விரட்டி விடுறானுங்க.  என்னை என்கரேஜ் பண்ணுரை ஆளை எல்லாம் விரட்டி விட்டுவிட்டு, சிம்புதேவன்னு ஒரு பையன் இருக்கான்ல....அவன் பாக்குறான்.

 

v

 

ஷங்கர் அதை மாத்துங்க, இதை மாத்துங்கனு சொல்லுறாறுன்னு சொல்லிக்கிட்டே இருந்தான்.  என் ஆளுங்களையும் தூக்கிட்டான்.  நான் அப்பத்தான் கேட்டேன்.  அவர் சொல்லுறாரு அவர் சொல்லுறாருன்னா அவரே டைரக்ட் பண்ணட்டுமே. நீ எதுக்கு இடையில..’ன்னு கேட்டேன்.  

 

பஞ்சாயத்து போய்க்கிட்டு இருக்கு.  தப்பான 10 பேரு உட்கார்ந்துக்கிட்டு வடை திண்ணுக்கிட்டு சினிமாவ கெடுக்குறானுங்க.  எனக்கும் ஆதரவா சில பேரு இருக்காங்க.   என்னை கூப்பிடுறானுங்க.    எதுக்கு கூப்பிடுறானுங்கன்னு தெரியல.   வந்து காலுல விழுன்னு கூப்பிடுறானுங்களான்னு தெரியல.  

 

நான் சொல்லுறதத்தான் கேட்கணும்னு என்கிட்ட வந்தா அது நடக்காது.   அதுக்கு வேற புது ஆளப்பாரு.  என்னையும் கலந்துகிட்டு வர்றதா இருந்தா இந்த படம் தொடரும்.   நீ சொல்லுறத மட்டும் கேட்டு நடிக்கிறதுக்கு இது ஆக்‌ஷன் படம் இல்ல.  ஷங்கர் பண்ணுறது மாதிரி இது கிராபிக்ஸ் படமல்ல.  இது ஹிஸ்டாரிக்கல்  படம்.  என்னோட உடல்மொழி, என்னோட இன்வால்வ்மெண்ட் ரொம்ப முக்கியம். வடிவேலுவுக்கு உடல்மொழிதான் தேவை.  வடிவேலுவுக்கு சிஜி தேவையில்ல.
 


எனக்கு வாய்ப்பு தந்தா தமிழ் சினிமாவுல நடிப்பேன்.  எனக்கு ஹாலிவுட்டுலே இருந்தும் அழைப்பு வருது.  பேசாம அங்க போயிடபோறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

''டக்குனு நீங்களும் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க'' - நடிகர் வடிவேலு பேட்டி 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
vadivelu

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மோட்ச தீபம் ஏற்ற வந்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. அம்மாவின் திதிக்கு இங்கு மோட்ச விளக்கு போடுவதற்காக நான் வந்திருக்கிறேன். என்னுடைய தெய்வம் அவர்கள். அவர் இறந்த துக்கம் என்னை விட்டு இன்னும் போகவில்லை. அம்மா இறந்த ஆறு மாசத்தில் தம்பி இறந்துட்டாரு. அந்த இரண்டு துக்கமும் இன்னும் குடும்பத்தை போட்டு வாட்டுது. இன்னும் அதில் இருந்து நாங்கள் மீளவில்லை. இப்பதான் அம்மாவிற்கு முடிந்திருக்கிறது. இன்னும் ஆறு மாதம் கழித்து தம்பிக்காக இங்க வந்து மோட்ச தீபம் ஏத்தணும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''எல்லாருமே வரலாமே (செய்தியாளர்களை நோக்கி) நீங்களும் கூட வரலாம். வீடியோ கேமரா எடுத்துக் கொண்டிருக்காமல் நீங்களும் வரலாம். வேலை இருக்கிறதா? வர வேண்டியதுதானே. இப்படியே கேமராவை பிடித்துக் கொண்டு எத்தனை நாள் வேலை பார்ப்பீர்கள். டக்குனு நீங்கள் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க. வாங்க எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்வதற்கு யாராக இருந்தாலும் வரலாம். யாரும் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. எல்லாரும் வந்தார்கள். டி.ராஜேந்தர் வந்தாரு, ராமராஜன் வந்தாரு, பாக்யராஜ் வந்தாரு எல்லாரும் நல்லது செய்யத்தான் வந்தாங்க. அது மாதிரி நல்லது செய்ய வருகிறார்கள். வருபவர்களை வரவேற்கிறோம். வரட்டும் வந்து மக்களுக்கு நல்லது செய்வது தப்பில்லையே வரட்டும்'' என்றார்.