Skip to main content

தீவிரப் புயலானது 'மிக்ஜாம்'-சென்னைக்கு அலர்ட்

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

nn


 
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 'மிக்ஜாம்' புயல், புயல் என்ற நிலையில் இருந்து தீவிரப் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. அதேநேரம் இன்று இரவு அல்லது நாளை காலை வரை இதேபோல் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் ஒன்றும் தெரிவித்துள்ளது. நாளை முற்பகல் மசூலிப்பட்டினம்-நெல்லூர் அருகே தீவிரப் புயலாகவே இப்புயல் கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்