Skip to main content

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு; தனிப்படை அமைப்பு

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

separate police force to catch illegal firecrackers

 

தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், பொது இடங்கள் மற்றும் கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் பட்டாசு விற்பனை தொடர்பான கட்டுப்பாடு விதிமுறைகளைச் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

 

தீபாவளி அன்று(12.11.2023) காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 வரை என மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விதிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும்; தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்; பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள 102 காவல் நிலையங்களிலும், எஸ்.ஐ. தலைமையில் 2 காவலர்கள் அடங்கிய தனிப்படை சென்னை காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.கே. சுதீஷ் மனைவியிடம் நூதன முறையில் மோசடி: இருவர் கைது

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
  dmdk excutive LK Suthish wife incident

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். இவர் தேமுதிகவில் துணை செயலாளர் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் இவரது மனைவியான பூர்ண ஜோதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில், “எனக்கும் எனது கணவருக்கும் சொந்தமாக சென்னை மாதவரம் மெயின் ரோடு 200 அடி சாலையில் சுமார் 2.10 ஏக்கர் காலியிடம் இருந்தது. அதில், அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்வதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் சர்மா (வயது 44) என்பவரின் நிறுவனத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்தோம்.

அதன்படி மொத்தம் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அதில் 78 வீடுகளை நில உரிமையாளரான எனக்கும், 156 வீடுகளை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் தனக்கு ஒதுக்கிய 78 வீடுகளில் 48 வீடுகளை எனக்கு தெரியாமல் எனது கையெழுத்தை போலியாக போட்டு சந்தோஷ் சர்மாவின் கட்டுமான நிறுவனம் வெளி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. அதன் மூலம் சுமார் ரூ.43 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் சர்மா, அந்நிறுவனத்தின் மேலாளர் சாகர் (வயது 33) மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சந்தோஷ் சர்மா,சாகர் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் (21.02.2024) கைது செய்து  நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 

Next Story

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றிய காவலர்; நேரில் அழைத்துப் பாராட்டிய கமிஷனர்!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
The policeman who saved the incident victim The commissioner called and praised in person

சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் இரண்டாம் நிலைக் காவலரான விக்னேஷ் பாண்டி என்பவர் காசிமேடு காவல் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20 ஆம் தேதி மாலை (20.02.2024) மாலை சுமார் 06.30 மணியளவில் காசிமேடு எஸ். என்.செட்டி ரோட்டில் காவல் வாகனத்தில் ரோந்து பணியில் இருந்துள்ளார்.

அச்சமயம் அவ்வழியே நடந்து சென்ற நபர் மீது ஒரு ஆட்டோ மோதியதில் அந்த நபர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனைக் கண்ட காவலர் விக்னேஷ் பாண்டி சுயநினைவின்றி கீழே விழுந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். இதனால் அவருக்கு சுயநினைவு திரும்பியது. அதன் பின்னர் தன்னுடன் பணியில் இருந்த காவலர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவருக்கு குடிநீர் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கிடந்தவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர் விக்னேஷ் பாண்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விபத்தில் சிக்கியவருக்கு சி.பி.ஆர். மற்றும் முதலுதவி கொடுத்து ஒரு உயிரைக் காப்பாற்றிய இரண்டாம் நிலை காவலர் விக்னேஷ் பாண்டிக்கு ஒரு பெரிய சல்யூட். காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், காவலர் விக்னேஷ் பாண்டியின் வீரச் செயலைப் பாராட்டினார். விக்னேஷ் பாண்டி உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.