Skip to main content

பற்றி எரிந்த தீ... பழி வாங்கிய பீடி

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

senior citizon fire incident in trichy srirangam 

 

திருச்சியில் புகை பிடிக்க பற்ற வைத்த நெருப்பில் முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

திருச்சி ஸ்ரீரங்கம் கீதாபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 80). சம்பவத்தன்று வீட்டில் தனது படுக்கை அறையில் உள்ள படுக்கையில் அமர்ந்தவாறு பீடியை பற்ற வைத்து புகை பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த பீடியில் இருந்த தீ அவர் அமர்ந்து இருந்த படுகையில் உள்ள போர்வையில் பட்டு தீ பிடித்தது. சிறிது நேரத்தில் போர்வையில் பிடித்த தீ தங்கவேல் உடல் முழுவதும் பரவி தீ காயம் அடைந்தார்.

 

பலத்த தீ காயமடைந்த நிலையில் தங்கவேலு திருவரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கவேலு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

10 மணி வரை மழை; நான்கு மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Rain till 10 p.m.; Alert for four districts

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 10 மணி வரை சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

முதல்நாளே பள்ளி வேனில் தீ; உயிர் தப்பிய மாணவர்கள்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
School van fire on first day; Students who survived

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்த நிலையில் தமிழக முழுவதும் இன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பபட்டுள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் இன்றைய நாளிலேயே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பஸ் பாஸ் விநியோகிக்கப்படாத நிலையில் மாணவர்கள் அடையாள அட்டையை வைத்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி பல்வேறு இடங்களில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி திறந்த முதல் நாளான இன்று திருவண்ணாமலையில் தனியார் பள்ளி வேனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்கள் உடனடியாக வேனிலிருந்து இறக்கி விடப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.